அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நுவகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளிலும், சேத்சிறிப்பாய, ஹிம்புத்தான, உடுமுல்ல வீதி, கொழும்பு 06 மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடை நீட்டிக்கப்பட்டதால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



