Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா

செப்டம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய ஆப்பிரிக்க நாடான ஜனநாயக காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் தொற்று, அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சுகாதாரப் பேரிடராக மாறியுள்ளது.

காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தரவுகளின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.

மே மாத மத்தியில் இந்தத் தொற்று உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, நோய் பரவும் வேகம் தீவிரமடைந்து தற்போது ஆறு மாகாணங்களில் உள்ள 60 சுகாதார மண்டலங்களுக்கு பரவியுள்ளது.

முக்கியமாக Bundibugyo என்ற அபூர்வ வகை எபோலா வைரஸால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதால், இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கென இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ நடைமுறையில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘எர்வெபோ’ (Ervebo) தடுப்பூசி முதற்கட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தொற்று பரவலைத் தடுப்பதில் நிலவும் முக்கியச் சவால்களாக, நாட்டின் கிழக்குப்பகுதியில் நீடிக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் மோதல்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் போதிய மருத்துவக் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் மருத்துவமனைகளுக்கு வெளியே சமூக அளவில் நடப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மேலும், புதிய கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மத்தியில் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 60 சதவீதமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை, தடுப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை என்றும், தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்து பரவி வருவதாகவும் எச்சரித்துள்ளன.

சர்வதேச நாடுகள் உடனடி நிதியுதவிகளையும் மருத்துவ ஆதரவுகளையும் அளித்து வருகின்றன.

முந்தைய செய்தி ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
அடுத்த செய்தி குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள் ; லெபனானில் எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் அச்சம்!

செப்டம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகள் விதிப்பு

மே 18, 2025
உலகம்

டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு.

செப்டம்பர் 16, 2024
உலகம்

சீனப் பொருளாதாரத்தில் மந்தநிலை: தொழிற்துறை உற்பத்தியில் சரிவு

ஆகஸ்ட் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?