Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள வித்தியா கொலை வழக்கு.

பிப்ரவரி 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் வித்யா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவாக காணப்பட்டது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் விடயங்களை முன்வைத்து, குறித்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியை நிர்ணயிக்குமாறு கோரினார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டனர்.

சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்தது.

மேற்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தங்களுக்கு தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே மேல் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

 

முந்தைய செய்தி களுத்துறையின் சில பகுதிகளில் நீர் வெட்டு.
அடுத்த செய்தி மட்டக்களப்பில் மின்சார கம்பிகளை வெட்டி திருட முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கோப் குழுவின் புதிய தலைவராக அரவிந்த செனரத்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதிகோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு கட்டுப்பாடு..!!

மார்ச் 13, 2025
இலங்கை

தெல்லிப்பழையில் விபத்து – முதியவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?