Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆகஸ்ட் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆபாச இணையத்தளங்களில் ஒன்றான ‘போன்ஹப்‘ (Pornhub) இன் தாய் நிறுவனமான ‘அய்லோ‘ (Aylo), சிறுவர் பாலியல்  துஷ்பிரயோக வீடியோக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கச் சம்மதித்துள்ளது.

இந்நிறுவனம் மொன்றியல் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அலபாமா மாநிலங்களில் தொடரப்பட்ட இரு பிரதான கூட்டு நஷ்டஈட்டு வழக்குகளை முடிவுக்குக்  கொண்டு வரும் வகையில் இந்த ஒப்பந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்களால் தொடரப்பட்ட இந்த வழக்குகளில், அவர்கள் சிறுமிகளாக இருந்தபோது அவர்களின் சம்மதமின்றி எடுக்கப்பட்ட பாலியல் காணொளிகள் ‘போன்ஹப்‘, ‘யூபோன்‘ (Youporn) மற்றும் ‘ரெட்டியூப்’ (Redtube) போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனால் அவரது அறிவின்றி பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள், “பழிவாங்கும் ஆபாசமாக” (Revenge Porn) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் இத்தகைய விதிமீறல்களை நன்றாகத் தெரிந்து கொண்டே அனுமதித்துள்ளதாகவும், அதன்மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

அய்லோ நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. எனினும், நீதிமன்ற ஒப்பந்தத்தின்படி இழப்பீட்டுத் தொகையை இந்நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்தவுள்ளது.

அத்துடன், அய்லோ நிறுவனம் தங்களின் இணையதளங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் மற்றும் சம்மதமற்ற ஆபாசக் காணொளிகள் பதிவேற்றப்படுவதைத் தடுக்கக் கடுமையான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் 
அடுத்த செய்தி  அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பிப்ரவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் செயற்கை நுண்ணறிவு தரவு திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு

மே 24, 2026
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோவிலுள்ள வேகக் கேமராக்களுக்கு தடை

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?