குடியுரிமை வாய்ப்பை இழந்த கனடியர்களுக்கான’ (Lost Canadians) புதிய குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் (Canadian Citizenship Certificates) கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உலகளவில், அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கர்களிடையே கனடிய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போக்கு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் கனடிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ‘C-3 மசோதா’ (Bill C-3) மூலம், வெளிநாடுகளில் பிறந்த கனடிய வம்சாவளியினருக்கு முதல் தலைமுறையையும் தாண்டி குடியுரிமை கோரும் உரிமை வழங்கப்பட்டது.
இதன்படி, பல தலைமுறைகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரும் தங்களுக்குக் கனடிய பரம்பரைத் தொடர்பு இருப்பதைச் சான்றுகளுடன் நிரூபித்தால் குடியுரிமைச் சான்றிதழைப் பெற முடியும்.
இதன் காரணமாக, குடியுரிமைச் சான்றிதழ்களுக்கான நிலுவை விண்ணப்பங்களின் (Backlog) எண்ணிக்கை தற்போது 1,21,800-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் கனடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்கள் தங்களின் சான்றிதழைப் பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

