மொன்றியல் நகரில் அமைந்துள்ள வில்லரே–செயின்தி-மிஷேல்–பார்க் -எக்ஸ்டென்ஷன் (Villeray–Saint-Michel–Parc- Extension) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 44 வயதுடைய பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களுக்கு விளக்கமளித்த மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் (SPVM) செய்தித் தொடர்பாளர் ஜோஹானி சார்லாண்ட் (Johany Charland), குறித்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவமானது மொன்றியல் நகரில் 2026-ஆம் ஆண்டில் பதிவான 15-வது கொலைச் சம்பவமாகப் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண்ணின் 51 வயதுக் கணவர், இக்கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராகச் சேர்க்கப்பட்டுள்ளதாக மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றிப் பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக சான்றுகளைச் சேகரித்து வருகின்றனர்.

