செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன், சர்வதேச அமைப்புக்களின்
உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிnறன எனத் தெரிவித்துள்ள அவர், 100 நாட்களைத் தாண்டி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புகூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய
சுரேஷ் பிரேமச்சந்திரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேசநியதிகளுக்கு உட்பட்ட வகையில், அந்த முறையில் இது
கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, அவர் கூறியுள்ளார்.


