மன்னார் வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று (7) காலை உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் தொடர்பாக வங்காலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சடலம் இந்திய மீனவரா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

