Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

ஜூலை 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (18) அதற்கான பூர்வாங்க நடவடிக்கையாக, குளங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து குறித்த குளங்களை பார்வையிட்டனர்.

இதன் போது பொறியியலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்கள், குளங்களைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புகள், பிரஜாசக்தி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இருக்கும் அலிகண்டல் குளத்தை பார்வையிட்டனர்.

இந்தக் குளத்தை முழுமையாக புனரமைப்பு செய்வதன் ஊடாக, விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் தொடர்ச்சியாகப் பயிர்ச் செய்கையை சரியான முறையில் நடத்துவதற்குரிய வாய்ப்புக் கிட்டும். இக்குளம் ஏற்கனவே ‘டித்வா’ புயலின் காரணமாக முழுமையாக பாதிப்படைந்திருக்கின்றது. எனவே முழுமையாக இது புனரமைப்பு செய்யப்பட இருக்கிறது.

திங்கட்கிழமை மேலும் ஆறு குளங்களை பார்வையிட்டு, விரைவாக அந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த வருடத்தின் பெரும் போகத்திற்கு முற்பகுதியில் இந்தக் குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு, விவசாயிகளின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினுடைய விசேடமான செயல்திட்டமாக இந்த விவசாய குளங்கள் புனரமைத்து விவசாயிகளுக்குக் கொடுப்பதன் ஊடாக, நெல் உற்பத்தியை அதிகரித்து இலங்கையில் காணப்படுகின்ற நெல்லினுடைய தட்டுப்பாடு மற்றும் நெல் உற்பத்தி சார் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய செய்தி கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அடுத்த செய்தி ஹாலிஃபாக்ஸின் வடகிழக்குப் பகுதியில் கட்டுப்பாட்டை மீறிய காட்டுத்தீ – தொடரும் மீட்புப் பணிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முத்தமிழ் வித்தகரின் நூற்றாண்டு விழா

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மே 9, 2025

மே 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முப்படையினருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுகாதாரக் கொள்கையில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு!

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?