Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூலை 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தங்களது பூர்வீக காணிகளை மீட்டெடுக்க மீண்டும் இரண்டாவது கட்டமாக ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று (18) 25 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பிளர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான ஆதரவை வழங்கினர்.

​கடந்த 2017.01.31 ம் திகதி பிலவுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பித்த இவர்களின் தொடர் போராட்டம் காரணமாக 2017.02.28 அன்று ஒரு தொகுதி பிலவுக்குடியிருப்பு காணிகள் இலங்கை விமானப்படையின் வசமிருந்து விடுவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2017.03.01 தொடக்கம் கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேற வேண்டும் என கோரி மக்கள் தமது தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு பகுதியில் இராணுவ நுழைவாயிலுக்கு முன்பாக ஆரம்பித்தனர் பல வருடங்களாக இடம்பெற்ற தொடர் போராட்டம் காரணமாக வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியின் ஒருபுறம் இருந்த காணிகளை இராணுவம் விடுவித்தது.

இருப்பினும் முழுமையாக காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து பல வருடங்களாக போராடிய போது அரச தரப்புக்களினால் உங்களுக்காக காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழிகளோடு இந்த தொடர் போராட்டத்தை மக்கள் 1111 ஆவது நாளில் நிறுத்தினர்.

இதன் பின்னர் இன்று வரை மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை ஆயினும் மக்கள் இது தொடர்பில் ஜனாதிபதி, ஆளுநர், மாவட்ட செயலாளர் என பலரிடமும் பலதடவைகள் தமது காணி விடுவிப்பு தொடர்பாக கோரியும் எந்த தீர்வுமற்ற நிலையில் போராடியே தமது நிலங்களை பெறுவது என்ற அடிப்படையில் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

​பல வருடங்களாகத் தொடரும் இந்த நில உரிமைப் போராட்டத்தில், தங்களின் சொந்தக் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரக் காணிகள் முழுமையாகத் தங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை தங்களின் தார்மீகப் போராட்டம் ஓயாது என்பதை மக்கள் இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தி இன்று (18) 25 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்
அடுத்த செய்தி மன்னாரில் 10 குளங்கள் முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் – இரு சீனப்பிரஜைகளுக்கு மரண தண்டனை

ஜூன் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

ஜூலை 26, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் – இஸ்ரேல் அறிவிப்பு!

செப்டம்பர் 28, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்

ஜூன் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?