சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் , இலங்கையின் உலகளாவிய சுகாதார காப்பீடு மற்றும் சுகாதாரக் கொள்கைகளில் பாலினத்தை பிரதானப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெளியிடப்பட்டது.
இலங்கை, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடாக இருந்தாலும், 95% உள்நோயாளி சிகிச்சையையும், பாதி வெளிநோயாளி சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது. UHC குறியீடு 67 ஆக உள்ள நிலையில், முன்மொழியப்பட்ட ஆரம்ப சுகாதார சீர்திருத்தங்கள் இதனை மேம்படுத்தும் என அமைச்சர் தெரிவித்தார். ஆரம்ப சமூக பராமரிப்பு அலகுகள் (PCCU) அறிமுகம் மற்றும் தடையற்ற பரிந்துரை பொறிமுறைகள் இதற்கு உதவுமென குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுகாதாரக் கொள்கைகளில் பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் வழிகாட்டுதல்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு நடைமுறை கருவிகளை வழங்கும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் WHO, UNICEF, UNFPA பிரதிநிதிகள், சுகாதார அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
