Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள்

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் கள தரிசிப்பை மேற்கொண்டனர்.

கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பள்ளங்களுக்குள் , வலி தெற்கு பிரதேச சபையினர் இலத்திரனியல் கழிவுகள் , மருத்துவ கழிவுகள் , இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையாக கழிவுகளையும் கொட்டியுள்ளனர்.

இது குறித்து வலி. வடக்கு பிரதேச சபையின் 26 உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் . மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் என பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு அளித்துள்ளனர். அத்துடன் வலி. தெற்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளி செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இந்நிலையில் வலி. தெற்கு பிரதேச சபையினர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு வந்து , கொட்டப்பட்ட குப்பைகளை குறித்த பள்ளங்களுக்குள் மேலும் தள்ளி விட முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் அறிந்த வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து , கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர , அவற்றை மேலும் பள்ளத்தினுள் தள்ளுவதில்லை என அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

இது தொடர்பில் , சுற்றாடல் அதிகார சபையினருக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடு அளித்த நிலையில் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள் கள தரிசிப்பினை மேற்கொண்டு , அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகள் தொடர்பிலும் தமது அவதானத்தை செலுத்தினர்.

அங்கு காணப்பட்ட குப்பைகளை மீள அள்ளவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை உறுப்பினர்களுக்கு தெரிவித்ததுடன் , தற்போதும் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமையால் , அதனால் எழும் புகையினால், அயலில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையான சுவாச நோய்கள் ஏற்பட ஏது நிலைமை உள்ளது என உறுப்பினர்களுக்கு தெரிவித்து, குறித்த விடயம் தொடர்பாக தாம் விரைவான நடவடிக்கையை மேற்கொள்வோம் என உறுதி அளித்து சென்றுள்ளனர்.

முந்தைய செய்தி யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியில் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு!

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண தேர்தல் முறையில் மாற்றம் தேவை- வலுக்கும் கோரிக்கை!

அக்டோபர் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம்!

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?