Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் சிசு செரிய பேருந்து சேவை ஆரம்பம்

ஜூலை 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை இன்று (28) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்திற்காக முதன்முறையாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது டன், மன்னாரிலிருந்து தலைமன்னார் வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக முதலாவது ‘சிசு செரிய’ பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஈடுபடுத்தப் பட்டிருக்கவில்லை.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டின் பேரில், 20 பேருந்துகளை ஈடுபடுத்தி ‘சிசு செரிய’ திட்டத்தின் முதற்கட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவைக்கு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து சங்கத்தின் பேரூந்து ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,

‘சிசு செரிய’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், மன்னார் மாவட்ட மாணவர்கள் பல வருடங்களாக பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து சேவைகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

அத்துடன், கடந்த கால அரசாங்கங்கள் வடபகுதி மாணவர்களைப் புறக்கணித்துச் செயற்பட்டுள்ளமை இதன் மூலம் தெளிவாகிறது.

இச் சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண கட்டணத்தில் பாதி மட்டுமே அறவிடப்படும் என்பதுடன், மீதித் தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கும்.

இதன் மூலம் கல்விக்காக பயணிப்போருக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரச அதிபர் கே. கனகேஸ்வரன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன், மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஷ் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்தி ஊஞ்சல் தடி முறிந்து விழுந்த சோகம் – 5 மாதக் குழந்தை பரிதாப பலி!
அடுத்த செய்தி மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம்-சந்திரசேகர் தெரிவிப்பு!

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்உலகம்

புடின் -கிம் ஜாங் இடையிலான உறவு சர்ச்சையில்.

ஜூன் 29, 2024
இலங்கைவிசேட செய்திகள்

டேன் பிரியசாத் கொலைச் சம்பவம் – பிரதான சந்தேக நபர் கைது

ஏப்ரல் 24, 2025
இலங்கை

நானுஓயா புகையிரத நிலையத்தில் சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள்!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?