கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஒரு தம்பதியினரும் நேற்று (1) திடீர் வாந்தி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் பிரிட்டிஷ் பெண் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இங்கிலாந்து பெண் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார், பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.