மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி இன்றைய தினம் சனிக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்றது.
மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான உணவுகளை வழங்குதல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணுதல் உள்ளிட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது.
அதேவேளை இன்றைய நிகழ்வில் வேல்ட் விசன் நிறுவனத்தினால் 5000 மாணவர்களின் ஊட்டச்சத்து தொடர்பான கையெழுத்து பிரதிகள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.
தென்மராட்சியில் உள்ள 33 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களிடம் ஊட்டச்சத்து தொடர்பான செயல்முறைகள் நடாத்தப்பட்டு சித்திரப் போட்டிகள் இடம்பெற்று அவை காட்சிப்படுத்தப்பட்டன அவற்றில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து உணவு தொடர்பான நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

