வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை மேற்க்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் 1985 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
