Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

ஜூலை 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘CUSMA’ எனப்படும் சுதந்திர வர்த்தக
உடன்படிக்கை தற்போதைய வடிவத்தில் நீடிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒப்பந்த விதிகளின்படி, தங்களுக்குள் நிலவும் வர்த்தக உடன்படிக்கையை மேலும் 16 ஆண்டுகளுக்கு, அதாவது 2042-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க விருப்பமா அல்லது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை மூன்று நாடுகளும் அறிவிப்பதற்கான இறுதி கெடு இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் மற்றும் மெக்சிகோவின் பொருளாதாரச் செயலாளர் ஆகியோருடன் அவசர இணையவழி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா தற்போதைய வடிவத்திலான ஒப்பந்த நீட்டிப்பிற்கு உடன்படவில்லை என்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), திட்டவட்டமாக அறிவித்தார்.  வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்தத்தின் குறைபாடுகளைக் களைவதற்கு, கனடா மற்றும் மெக்சிகோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பால், வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இந்த CUSMA ஒப்பந்தம் உடனடியாக ரத்தாகிவிடாது என்பது நுகர்வோருக்கும் வர்த்தகத் துறையினருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனேடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைக்கேல் மா

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில், பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியுள்ளது கனேசடேக் பழங்குடி சமூகம்!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய அரசினால் இடை நிறுத்தப்பட்ட புலம்பெயர்தல் திட்டம்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?