நாட்டில் நெல் தொடர்பிலான கேள்வி அதிகரித்திருந்த நிலையில் தற்போது சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலையை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நாடு நெல் ஒரு கிலோ 120 ரூபா, சம்பா நெல் ஒரு கிலோ 130 ரூபா, கீறி சம்பா ஒரு கிலோ 140 ரூபா என்ற அடிப்படையில் நெல் கொள்வனவு செய்யப்படுமென கூறப்பட்டுள்ளது.
மேலும் இருப்பிலுள்ள நெல்லை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


