Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் புதிய மொழிச் சட்டம் – தகுதிச் சான்றிதழ் இல்லாத வயது வந்த மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியிலேயே தொழிற்கல்வி!

ஜூன் 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ராபெர்ஜ் (Jean-François Roberge) ‘மசோதா 8’-இனை கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் (National Assembly) சமர்ப்பித்துள்ளார்.

இந்த புதிய சட்ட வரைவின்படி, கனடாவில் ஆங்கில வழிக் கல்வி கற்பதற்கான உத்தியோகபூர்வ ‘தகுதிச் சான்றிதழ்’ (Certificate of Eligibility) இல்லாத எந்தவொரு வயது வந்த மாணவரும், இனி ஆங்கிலேயக் கல்விச் சபைகளின் கீழ் இயங்கும் தொழிற்கல்வி மற்றும் முதியோர் கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில முடியாது.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, தற்போது ஆங்கிலேயத் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவர்களில் சுமார் 75 சதவீதத்தினர் இந்த புதிய விதியின் கீழ் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் தகுதியை உடனடியாக இழந்து, பிரெஞ்சு மொழி கல்வி முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதுவரை கியூபெக்கில் உள்ள தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அண்மையில் முன்-பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கும் மட்டுமே பொருந்தும் வகையில் செயற்பட்டு வந்த ‘பிரெஞ்சு மொழி சாசனம்’ (Charter of the French Language), தற்போது முதல்முறையாக முதியோர் மற்றும் தொழிற்கல்வித் துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பெற்றோர் எவரேனும் ஒருவர் ஆங்கில வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த ‘தகுதிச் சான்றிதழ்’ (COE) வழங்கப்படும். இந்த சான்றிதழ் இல்லாத புலம்பெயர்ந்த புதுக்குடிமக்கள் (Newcomers) மற்றும் இதர மாணவர்கள் இனி பிளம்பிங், தச்சு வேலை, சமையல் கலை,
கணக்குப்பதிவியல் போன்ற தொழிற்கல்விகளைப் பிரெஞ்சு மொழியிலேயே பயில வேண்டும். “கியூபெக்கில் பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுப்பதே தமது முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ள மாகாணக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல் (Sonia Lebel), கியூபெக்கிற்கு வருபவர்கள் பிரெஞ்சு மொழியிலேயே வாழவும், வேலை செய்யவும், பொருளாதார ரீதியாக வளரவும் பழக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த மசோதாவிற்கு கியூபெக் ஆங்கிலேயப் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் மொண்ட்ரியல் ஆங்கிலேயக் கல்விச் சபை (EMSB) ஆகிய அமைப்புகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

கியூபெக் மாகாணம் ஏற்கனவே சுகாதாரம், கட்டுமானம், முதியோர் பராமரிப்பு மற்றும் நிர்வாகத் துறைகளில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் (Labour Shortages) சந்தித்து வருகிறது.

இந்த நேரத்தில் தகுதியான தொழிலாளர்களை உருவாக்கும் ஆங்கிலேயத் தொழிற்கல்வி நிலையங்களை முடக்குவது, கியூபெக் மாகாணப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, ஆங்கிலேயக் கல்விச் சபைகளின் கூட்டமைப்புத் தலைவர் ஜோ ஓர்டோனா (Joe Ortona) குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மொழித் தடையின் காரணமாக 65% முதல் 70% வரையிலான முதியோர் மற்றும் பகுதிநேர மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே கைவிடும் (Drop out) அபாயம் உள்ளதாகவும், இதனால் கல்விச் சபைகளுக்கு ஆண்டுதோறும் 15 மில்லியன் டொலர் வரை நிதி இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் ‘வெஸ்ட் ஐலாண்ட்’ பிராந்தியத்தைத் தாக்கிய சூறாவளி – 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிப்பு
அடுத்த செய்தி கனடாவின் ‘ஆல்டோ’ திட்டத்தில் ‘கிங்ஸ்டன்’ (Kingston) நகரத்தை இணைக்க மத்திய அரசு பரிசீலனை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

ஜூலை 13, 2026
கியூபெக்

சாகுனே தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

ஜூலை 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அனுராதபுர போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவு பெற்றது ……

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மாரில் மீண்டும் நிலஅதிர்வு !

ஏப்ரல் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?