ஈரான் மீதான தாக்குதலைத் தவிர்க்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது, ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது,
“இந்த போர் ஒட்டுமொத்தமாக ட்ரம்பிற்கும், அமெரிக்காவின் அதிகாரத்திற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, ஈரான் மீது திருப்பித் தாக்க வேண்டாம் என்று தான் கூறப்போவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே நெதன்யாகு தாக்குதலை நடத்தியுள்ளார். இது ட்ரம்பிற்கு கிடைத்துள்ள அவமானத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
