மலையக பகுதிகளில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதன்படி டிக்கோயா வோர்லி தோட்ட பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வீதியில் குறித்த மண்சரிவு ஏற்பட்டமையால் போக்குவரத்து சிலமணிநேரம் முழுமையாக தடைப்பட்டிருந்ததுடன், அவ்வீதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்றிருந்தது.
இதன்படி சரிந்த மண்ணை அகற்றுவதட்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்ததை தொடர்ந்து குறித்த போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
