யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாளான இன்றைய அகழ்வுப்பணிகளின்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மூன்று கட்டங்களிலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 283ஆக, உயர்ந்துள்ளது.
அவற்றில் 279 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், எலும்புக்கூடு இலக்கங்கள் 266 மற்றும் 261 ஆகியவற்றுடன் தொடர்புடைய மனித எச்சக் குவியலில், இன்று புதிதாக இலக்கம் இடப்பட்ட 274ஆம் எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய அகழ்வுப் பணிகளில் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
