வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பெரெண்டினா லயிப் லைன் வேலைத்திட்டம -2025 திட்டத்தின் இன் கீழ் அவர்களது நிதி அணுசரணையில் வவுனியா பிரதேச செயலக மகளிர் பிரிவால் சமுர்த்தி அபிவித்தி வள நிலையத்தில் வைத்து இவ் உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 34 கர்ப்பிணித் தாய்மாருக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் கு.உமாநந்தனி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெரண்டினா லயிப் லைன் இன் வவுனியா மாவட்ட முகாமையாளர் மற்றும் பியாளர்கள்இ கர்ப்பிணி தார்ய்மார் எனப பலரும் கலருத்து கொண்டனர்.
