Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சி இளம் கலைஞர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு, நாமல் ராஜபக்ஷ கடும் கண்டனம்!

ஜூன் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காகவும், குறிப்பிட்ட சில தரப்பினரை இலக்கு வைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் (Selective enforcement) அமல்படுத்தி வருவதாக, அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம் கலைஞர் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையிலான பாடல்கள் மற்றும் காட்சிகளை உள்ளடக்கிய காணொளிகளை டிக்டொக் (TikTok) சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று விசேட அறிக்கை ஒன்றினைக் கணொளி வாயிலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதகமில்லாத சாதாரணக் கலைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தவறானது என, அந்த அறிக்கையில் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சட்டத்தை நிலைநாட்டும் போது அது அனைவருக்கும் பொதுவானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் எனவும் ஆனால், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சில சம்பவங்களுக்கு மட்டுமே அவசர அவசரமாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும், நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

ஒரு ராப் பாடலை உருவாக்கியதற்காக அல்லது சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பதிவிட்டதற்காக ஒரு இளம் கலைஞரைத் தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பது விந்தையானது என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பல்வேறு குற்றச்செயல்கள்
பகிரங்கமாக அரங்கேறி வரும் நிலையில், அங்கெல்லாம் இத்தகைய கடுமையான சட்டங்களை ஏவத் தயங்கும் அரசாங்கம், வடக்கில் உள்ள ஒரு கலைஞருக்கு எதிராக மட்டும் உடனடியாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது ஏன்? என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதுடைய இளைஞர் கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்ட ஒரு கலைஞர் ஆவார். இவர் தனது கணினியைப் பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட அமைப்பின்
சின்னங்கள் மற்றும் பழைய பாடல்களைக் கொண்டு நவீன பாணியிலான இசைக் கோர்ப்புகளை உருவாக்கி டிக்டொக்கில் பதிவேற்றியுள்ளதாக, இலங்கையின் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் போலி உருவங்களைக் காட்டி இணைய வழி நிதி மோசடி!
அடுத்த செய்தி செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் இன்று மேலும் 8 எலும்புக்கூடுகள் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள் – ஒரு யானை உயிரிழப்பு

ஜூலை 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!

ஜூலை 20, 2025
இலங்கை

யாழில். சட்டவிரோதமான முறையில் மிருக வேட்டை

ஜனவரி 6, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

700 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது..

ஏப்ரல் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?