Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதையின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி இன்று இடம்பெற்றது

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதையின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 13ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டதரணி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய அகழ்வின் போது, 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு என்பு தொகுதியும், சிறுவர்களுடைய என்பு தொகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு என்புக்கூட்டு குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு என்பு கூட்டின் கால் பகுதி சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை. அதன் ஆய்வுகளின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும்.

அதேவேளை இன்றைய தினமும் என்பு கூட்டுடன் செப்பு துண்டொன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்வின் போது நாணய வடிவிலான தாயத்து என நம்பப்படும் சான்று பொருள் ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை
அடுத்த செய்தி கியூபெக்கில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் நால்வர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

ஏப்ரல் 18, 2026
இலங்கை

ஆலயங்கள் நீதிமன்ற படியேறியுள்ளன – நா.வேதநாயகன்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 ஜனவரி 2026

ஜனவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?