Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

ஏப்ரல் 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மண்டபம்  அடுத்துள்ள அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின்  வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.

மன்னார் வளைகுடா  கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்,  தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய   தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள்  வலைகளில் சமீப காலமாக கடல் ஆமை, கடல் பசு,  டால்பின்   சிக்குகிறது.

அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.

இந்நிலையில் இன்று (18) மண்டபம் அடுத்த அய்யன் தோப்பு   தெற்கு   மன்னார்   வளைகுடா கடற்கரையில்  இறந்த நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல்  பசு எனவும் அது சுமார் 800 கிலோ எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடல் பசு மீன்பிடி  படகின் அடிபகுதியில் உள்ள இரும்பு விசிறி வெட்டியதில் உயிரிழந்ததா?  அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம்  தெரியவரும் என மண்டபம் வனச்சரகர்  தெரிவித்தார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.

முந்தைய செய்தி 91 லட்சம் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
அடுத்த செய்தி உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நாகர்கோவிலில் கஞ்சா மீட்பு!

ஜூலை 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்!

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு – உயரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு!

நவம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?