விதையனைத்தும் விருட்சமே ஊடாக மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவில் 160 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டின் உள்ள வடலியடைப்பு ஒன்றியத்தினரின் நிதிப் பங்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தின் தலைவாக்களை பாரதி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பயனாளிகளுக்கான உலர் உணவுப்பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கி வைத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்குகின்ற இந்த விதையனைத்தும் விருட்சமே செயல் திட்டமானது பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக பிளாஸ்டிக் அற்ற சூழலை உருவாக்கும் நோக்கோடு சிரமதான பணிகள், மரநடுகை திட்டங்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தல் உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் கற்றலுக்கான ஊக்குவிப்பு செயல்பாடுகள் வரட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்கள் ஏற்படுகின்ற போது பாதிக்கப்படும் மக்களுக்கான உதவிகள் என பல்வேறு செயல் திட்டங்களை குறித்த விதையனைத்தும் விருட்சமே குழுமம் முன்னெடுத்து வருகின்றது.
வடக்கு கிழக்கில் தழுவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டங்கள் அண்மைக் காலமாக மலையக மக்களால் விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளுக்கு அமைவாக மலையகப் பகுதிகளுக்கும் தனது சேவைகளை விஸ்தரித்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கடந்த டித்வா புயலின் போதும் மலையக மக்களுக்கான பாரிய உதவித் திட்டங்களை முன்னெடுத்திருந்ததோடு அந்த வகையிலே இவ்வாறு பிரதி அண்மையில் தலவாக்கலை பகுதியில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை அமைவாக உலர் உணவு பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இவ்வாறு கொண்டு சென்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 28.05.2026 வியாழக்கிழமை மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான அ.கு. கிறிஸ்டோபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தலவாக்கலை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி A. விமலதர்சினி தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய அதிபர் பெரியநாயகம் தலவாக்கலை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கமலராணி மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பயணாளிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரமும் தங்களுக்கு இந்த பொருட்களை கொண்டு வந்து தந்தமைக்காக மலைக உறவுகள் விதையனைத்தும் விருட்சமே குழுமத்திற்கு தங்களது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
