Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மாகாண அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தீவிர இனவெறிப் பேரணி

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷாவினிகன் (Shawinigan) நகரில் அண்மையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் (Asylum seekers) புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக நடத்தப்பட்ட தீவிர இனவெறிப் பேரணி ஆனது, மாகாண அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொன்றியலுக்கு (Montreal) வடகிழக்கே அமைந்துள்ள ஷாவினிகன் நகரில் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றிற்குச் சொந்தமான முன்னாள் தங்குமிடம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கியூபெக்கின் தீவிர வலதுசாரி அமைப்பான ‘அட்லாண்டே’ (Atalante) மற்றும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேவாலய வளாகத்தின் முன்னால் திரண்டு இந்த இனவெறிப் பேரணியை முன்னெடுத்தனர்.

பேரணியின் போது, புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், கியூபெக்கின் கலாசாரப் பாதுகாப்பை வலியுறுத்தியும் தீவிரவாதத் தொனி கொண்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கியூபெக் (Quebec) மாகாணத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இந்த “வெறுப்புப் பிரசாரத்திற்கு” தங்களின் கடுமையான கண்டனங்களை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்து வருகின்றனர்.

கியூபெக் மாகாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புப் போக்குகளின் வெளிப்பாடாகவே, இந்தச் சம்பவம் நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மலையக மக்களுக்கு உதவி புரிந்த விதையனைத்தும் விருட்சமே
அடுத்த செய்தி கியூபெக் பிராந்தியத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் சடலம் மீட்பு !

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் மில்டன்-பார்க் பகுதியில் மறுவாழ்வு மையங்களுக்காக போதைப்பொருள் பயனாளிகள் பல மாதங்கள் காத்திருப்பு!

மே 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்

ஜூன் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?