Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெற இணக்கம்

மே 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக, காணி விடுவிப்பு தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

இந்த ஆய்வுகளின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

அக் கலந்துரையாடலில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெளிவாக முன்வைத்தனர்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டுக் கலந்துரையாடப்பட்டது.

அவற்றில் உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது

வலிகாமம் வடக்கு பகுதியில் 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளின் அவசியம் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சபையில் அறிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் , மாவட்ட மட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி எமது அரசாங்கம் காணிகளை நிச்சயம் விடுவிக்கும் – உபாலி சமரசிங்க
அடுத்த செய்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அதிபர்களால் ஒரே நாளில் அனுப்பப்பட்ட 1000 தந்திகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது!

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இருந்து சென்ற பஸ் விபத்து – ஒருவர் பலி 08 பேர் படுகாயம்

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும் – சுரேஸ் பிரேமசந்திரன்

மே 10, 2026
இலங்கை

பொது பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மார்ச் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?