ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தந்திகள் இன்றைய தினம் அதிபர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள மிகை ஊழியர் அதிபர்கள் தங்களுக்கான கோரிக்கையினை செவிசாய்க்கும் பொருட்டு பல்வேறு தரப்பினர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தகவல்களை வழங்கியிருந்தனர்.
இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பல அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவித்திருந்த போதிலும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகை ஊழியர் அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் இதுவரை சீர் செய்யப்படாமல் காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமது கோரிக்கைகளை கலந்துரையாடுவதற்காக நேரத்தை ஒதுக்குமாறு தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகை ஊழியர் அதிபர்கள் தபால் நிலையங்கள் ஊடாக தந்திகளை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
