Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – நாமல் ராஜபக்க்ஷ

ஏப்ரல் 18, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்களை கைது செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்துள்ளதாக அரசாங்கத்தினர் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். தேர்தல் மேடைகளில் ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்க்ஷ கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் வேட்பாளர்கள்  மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன அநுராதபுர மாவட்டத்தில உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட உள்ளது. விசேடமாக இன்று 35 வயதுக்கும் குறைந்த எமது இளம் வேட்பாளர்களை சந்தித்து கலந்துறையாடியிருந்தோம். அரசாங்கம் எவ்வாறான விடயங்களை கூறினாலும் இறுதி தீர்மானம் மக்களுடையது. தமக்கு வாக்களிக்காது விடின் மாகாண சபைகளுக்கு பணம் வழங்கமாட்டோம் என அரசாங்கம் பொதுமக்களிடம் அச்சுறுத்தல் விடுக்கிறது. அதேநேரத்தில் இந்தியாவுடன் இந்நாட்டு பாதுகாப்புத் தொடர்பில் பொதுமக்கள், ஊடகங்கள் மாத்திரமல்ல பாராளுமன்றத்துக்கு கூட அறிவிக்காமல் இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் உள்ள 159 உறுப்பினர்களுக்கும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து எவ்விடயமும் முழுமையாக தெரியாது. தேர்தல் பிரச்சாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர காரணமாக இருந்தவர்களை கைது செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைது செய்துள்ளதாக அரசாங்கத்தினர் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். தேர்தல் மேடைகளில் ராஜபக்ச குடும்பத்தினரை சாடாது ஜனாதிபதி உலகளாவிய வர்த்தக சரிவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்புக்கு பின்னர் உலக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உலக அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் நிலைமையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் வர்த்தகம் தொடர்பில் உலக நாடுகள் புதிய இணக்கப்பாடுகளை எட்ட தயாராக உள்ளன. சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பிற நாட்டு தலைவர்களை சந்தித்து  வர்த்தகம் தொடர்பில் கலந்துறையாடுகின்றனர். எனினும் இந்நாட்டு ஜனாதிபதி நாடு முழுவதும் உள்ள தேர்தல் மேடைகளில் எம்மைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்து-லங்கா ஒப்பந்தம் முழுமையான பலனைத் தரவில்லை. இந்தியாவுடன் இருந்த பகையை மறந்து அபிவிருத்தி சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் வெளிப்படைத்தன்மை இன்றி பொதுமக்களுக்கு அறிவிக்காது மேற்கொள்ளப்படும் இரகசிய ஒப்பந்தங்களை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது புலனாய்வுப் பிரிவிலிருந்த அதிகாரிகள் இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், பதில் பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றுகின்றனர்.

ஆகையால் இம்முறை நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தாகுல் இடம்பெறும்  என்பதை அறிந்திருந்தோம் எனினும் உயிர்த் ஞாயிறு அன்று இடம்பெறும் என்பதை நாம் அறிந்திருக்க வில்லை என, தமது கடமைகளை புறக்கனித்த அதிகாரிகளுக்கே தற்போது பொதுமக்களை பாதுகாக்கும் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

முந்தைய செய்தி வரிவிதிப்பை எதிர்கொள்ள சீனாவில் புதிய வர்த்தக பிரதிநிதி நியமனம்
அடுத்த செய்தி NPP தமிழ் கட்சிகள் மீது உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்துகிறது – கஜேந்திரகுமார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு – மாங்குளம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள்!

மே 31, 2025
இலங்கை

யாழ்.மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?