நாட்டில் மின் கட்டணம் மற்றும் எரிபொருள் உயர்வு காரணமாக உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருஷான் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ப்ரைட் ரைஸ், கொத்து, பொதி செய்யப்பட்ட சோறு என்பன 30 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.
சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும். தேநீர் வகைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

