Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகர உணவகமொன்றை 14 நாட்கள் மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவு வழங்கிய நிர்வாகியை விளக்கமறியலில் வைத்த உணவகத்திற்கு 14 நாட்களுக்கு மூடி மூடுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் நிர்வாக நடத்துனர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உணவகத்தை எதிர்வரும் 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டு நீதவான் நீதிமன்ற கட்டளையையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

நகரின் தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அருகாமையிலுள்ள உணவகம் ஒன்றில் தயாரித்து வழங்கிய உணவு மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்து வருவதாக குறித்த உணவகத்துக்கு எதிராக கடந்த 22 ம் திகதி வெள்ளிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்குதலையடுத்து அந்த உணவகத்தின் நிர்வாகியை இன்று 26 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை களஞ்சியபடுத்தியமை, இயையான உணவு அதிகாரியின் அனுமதியின்றி உணவு பொருட்களை உற்பத்தி செய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவகத்தை நடாத்தி சென்றமை,

கழிவு நீரை திறமையான முறையில் வெளியேற்றாமை, உணவு கையாளும் இடப்பரப்பில் தொற்று ஏற்படக்கூடிய விதத்தில் விலங்கு (பூணை) தென்பட்டமை மற்றும் மூடி இடப்படாத கழிவு தொட்டிகள் இருப்பது போன்ற குற்றச்சாட்டுக்களை பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றில் முன்வைத்தனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தின் குறைபடுகளை திருத்தம் செய்யும் வரை 14 நாட்களுக்கு உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு கட்டளை பிறப்பித்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிர்வாக நடத்துனரை பிணையில் விடுவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தை மூடி நீதிமன்ற கட்டளையை ஒட்டினர்.

முந்தைய செய்தி பலாலி கிழக்கு முதற்கட்டமாக விடுவியுங்கள் – மாவட்ட செயலாளர் கோரிக்கை
அடுத்த செய்தி மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் குருதியில் கிருமித்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 1, 2025
இலங்கை

யாழில் ஐஸ் போதை பொருளுடன் இருவர் கைது!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

QR முறைமை சீர் செய்யப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

மார்ச் 17, 2026
இலங்கை

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?