Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் நடைபெற்ற பாரம்பரியமிக்க போர்த்துக்கேய மதப் பேரணி

மே 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் புதிய பொதுப் பிரார்த்தனை தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி, உள்ளூர் நகரசபை நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த போதிலும், மொன்றியலின் பாரம்பரியமிக்க போர்த்துக்கேய மதப் பேரணி எவ்வித தடங்கலுமின்றி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

மொன்றியலின் ‘பிளாட்டோ-மொன்ட்-ரோயல்’ (Plateau-Mont-Royal) பிராந்திய நிர்வாகம் இந்தப் பேரணிக்கான அனுமதியை இறுதி நேரத்தில் ரத்து செய்திருந்தது.

எனினும், மொன்றியல் காவல்துறையினர் (SPVM) இந்த விவகாரத்தில் தலையிட்டு, பேரணிக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கி அதனை நடத்த அனுமதித்ததால் பெரும் சர்ச்சை தற்காலிகமாகத் தணிந்தது.

‘சென்ஹோர் சாண்டோ கிறிஸ்டோ’ (Senhor Santo Cristo) என்று அழைக்கப்படும் இந்த ஆன்மீக மற்றும் கலாசார வீதி உலா, மொன்றியலில் வாழும் போர்த்துக்கேய வம்சாவளி மக்களால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிக விமர்சையாக நடத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

‘மிஷன் சாண்டா குரூஸ்’ கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த இமானுவேல் லின்ஹாரெஸ் (Emanuel Linhares) கருத்துத் தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியே தாங்கள் அனுமதிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் நிகழ்வு நடப்பதற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்னரே நகரசபை நிர்வாகம் அனுமதியை மறுத்து அதிர்ச்சியளித்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் கியூபெக் மாகாண அரசால் பொது இடங்களில் திட்டமிட்ட மத வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளைத் தடை செய்யும் புதிய மதச்சார்பின்மை விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.

இதனை அடிப்படையாகக் கொண்டே பிராந்திய நகரசபை இந்த அனுமதியை மறுத்திருந்தது.

எனினும், மொன்றியல் காவல்துறையினர், நகரசபையின் தடையை மீறி பேரணியை அமைதியான முறையில் நடத்துவதற்கும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியலில் தீக்கிரையான அதிநவீன எஸ்.யு.வி (SUV) ரக வாகனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

ஜூலை 1, 2026
கியூபெக்

மொன்றியலின் மொன்டேரேஜில் கண்டெடுக்கப்பட்டுள்ள கிரனேட் ரக கைஎறி குண்டு

ஆகஸ்ட் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்காண பயண ஆலோசனை புதுப்பித்தது அரசு!

ஏப்ரல் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?