ஹான்டா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நான்கு கனடியர்களில் ஒருவருக்கு ஹான்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படாத ஆரம்ப பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் Bonnie Henry தெரிவிக்கையில், காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வின்னிபெக் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் இறுதி உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை என்றாலும், அந்த நபர் ஹான்டா வைரஸ் பாதிப்புடன் இருப்பதாக கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த வைரஸ் COVID-19 அல்லது காய்ச்சல் போன்ற பரவலான தொற்றாக மாறும் அபாயம் இல்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
