Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூறுங்கள் – தாயகச் செயலணி அழைப்பு!

மே 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள் முன்வர வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே அவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஈழத்தமிழினத்தின் இனப்படுகொலை நாளாகிய மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை கடைப்பிடிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது எமது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு இனப்படுகொலை நடத்தப்பட்டதன் நினைவாகவும், அக் காலப்பகுதியில் எமது மக்கள் பட்ட வேதனைகளை உணர்த்தும் விதமாகவும், தற்கால இளைய சமுதாயத்தினருக்கு எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களை கடத்தும் நோக்குடனும், எமது மக்கள் இறுதி யுத்த களத்தில் தங்களை பட்டினிச் சாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அருந்திய உப்பில்லாக் கஞ்சியினை நினைவூட்டும் விதமாக, அக்கஞ்சியினை வடக்கு கிழக்கு தாயக மக்கள் அனைவரும் பருகி எம் மக்களின் துயரில் ஒன்று கலக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் 12 ஆம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்குப் பகுதிகளில் எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட பிரதேசங்களை மையப்படுத்தி நினைவுத் தூபிகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களினதும் முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கும் விதமாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து மே 18ஆம் திகதி வரை குறித்த நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படவுள்ளதுடன், இக்காலப்பகுதியில் எமது தாயக மக்களும் உணர்வு பூர்வமாகக் கலந்து எமது இனம் எதிர்நோக்கிய பட்டினிப்போரின் துயரங்களில் பங்கெடுப்பதுடன், சிங்கள அரசு திட்டமிட்டு நடத்திய அந்தப் பட்டினிப் போரின் வலிகளை தற்கால இளையோருக்கு உணர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு.

மேலும் இக் காலப்பகுதிகளில் எமது மக்கள் தங்கள் பிரதேசங்களில் கலியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன், விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்வுகளையும் முழுமையாகத் தவிர்த்து, பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

மாணவர் அமைப்புகள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என இன உணர்வாளர்கள் அனைவரும், ஸ்ரீலங்கா அரசு தமிழினத்திற்கு எதிராக உணவையும், மருந்தையும் முழுமையாகத் தடுத்து, திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு எம் உறவுகள் பட்ட துயரில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனேடிய காளான்களுக்கு புதிய வர்த்தக வரிகளை விதித்துள்ள அமெரிக்கா
அடுத்த செய்தி வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மது போதையில் வர்த்தக நிலையத்தில் அட்டகாசம் புரிந்த மதகுரு கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கியை கைப்பற்றியது விசேட அதிரடிப்படை!

ஆகஸ்ட் 2, 2025
இலங்கை

சிகிச்சைக்காக வந்த தாயொருவரிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியரொருவருக்கு 15 வருட கடுங்காவல்!

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?