Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கணவரை கொலை செய்த மனைவி

மே 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,

மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என்றும் கொலை செய்த அவரது மனைவி மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் தெரிய வருகிறது.

குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உறப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் மன்னார் பகுதியில் மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 என்பு கூட்டு தொகுதி
அடுத்த செய்தி கடற்தொழிலுக்குச் சென்று மாயமான இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக கரை ஒதுங்கிய பாகங்கள்!

டிசம்பர் 29, 2025
இலங்கை

யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோவிலுள்ள வேகக் கேமராக்களுக்கு தடை

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மின்னல் தாக்கத்தினால் 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?