Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கத்திற்கு காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை – நா.உ.க.இளங்குமரன்

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தையிட்டி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பாதல் குழப்பம் ஏற்பட்டதால், காணி அளவீடு இடம்பெறாது போனது. மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்த விகாரையானது, எமது ஆட்சிகாலத்தில் கட்டபட்டதில்லை. காணிகளை மீள கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். எமது அரசாங்கத்தில் காணிகளை சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை.

காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை. எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.

பவாணி வீதியை மிக துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம். அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் என குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்.

வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்கும் போது அதனை குழப்புகின்றனர்.

விகாரை விடயத்தில், பலாலி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளையும், இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது
அடுத்த செய்தி வவுனியாவில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம்….

மார்ச் 3, 2025
இலங்கை

பயன்பாடின்றி காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

பிப்ரவரி 13, 2025
இலங்கை

உலர் உணவு பொதிகளை வழங்குவதில் என்ன பிரச்சினை? (Video)

டிசம்பர் 24, 2025
இலங்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மஹிந்த ஜயசிங்க

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?