கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பிரதமர் மார்க் கார்னி ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சில கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க வர்த்தக அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியது குறித்து கேட்கப்பட்டபோது,“கனடாவுக்காக ஒரே ஒரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துபவர் மட்டுமே உள்ளார், அது கனடா மத்திய அரசு தான்” என அவர் கூறினார்.
கன்சர்வேட்டிவ் எம்.பி. Jamil Jivani, தனது கட்சி உறுப்பினர்களுடன் Washington, D.C.-ல் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer மற்றும் கனடிய தொழில் வட்டாரங்களுடன் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், கனடாவின் அமெரிக்க தூதர் Mark Wisemanவும் கலந்து கொண்டார். இதற்கு பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி,“இரு நாடுகளும் சுதந்திரமானவை, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், இறுதியில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்துவது மத்திய அரசு தான்” என்று வலியுறுத்தினார்.
