Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் குடும்ப மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்புவதில் பாரிய பின்னடைவு

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் குடும்ப மருத்துவப் படிப்புக்கான (Family Medicine Residency) இடங்களை நிரப்புவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கனேடிய மருத்துவ மாணவர் சேர்க்கை அமைப்பு (CaRMS) தெரிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பு இடஒதுக்கீட்டு முடிவுகளின்படி, கியூபெக்கில் மட்டும் 151 குடும்ப மருத்துவக்கற்கை இடங்கள் விண்ணப்பங்கள் இன்றி வெறுமையாக உள்ளன.

இது, நாடு முழுவதும் வெறுமையாக உள்ள மொத்த குடும்ப மருத்துவக்கற்கை இடங்களில் சுமார் 60 சதவீதமாகும். அரசாங்கம் இடங்களின் எண்ணிக்கையை 1,008 ஆக உயர்த்திய போதிலும், புதிய மருத்துவ பட்டதாரிகள் இத்துறையைத் தேர்வு செய்ய முன்வராதமை, கியூபெக்கின் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

கியூபெக் மாகாண அரசாங்கத்தின் சில கடுமையான சட்டங்களே இதற்குக் காரணமாகின்றன என மருத்துவ மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, புதிய மருத்துவர்களை மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று பணியாற்றக் கட்டாயப்படுத்தும் கியூபெக் அரசின் போக்கு, மாணவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கியூபெக்கைச் சேர்ந்த பல மாணவர்கள் மற்ற மாகாணங்களுக்குச் சென்று பணிபுரிதலிலும் வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கியூபெக்கில் பணியாற்றும் குடும்ப மருத்துவர்களில் 22 சதவீதத்தினர் 60 வயதைக் கடந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய மருத்துவர்கள் இத்துறையில் இணையாதது கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் குடும்ப மருத்துவர்களைச் சந்திப்பது கியூபெக் மக்களுக்குப் பெரும் போராட்டமாக இருக்கும் என மருத்துவ சங்கங்கள் எச்சரித்துள்ளன.

முந்தைய செய்தி மொன்றியலின் செயிண்ட் – லாரன்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு
அடுத்த செய்தி சிறுவர்களுக்கு சக்தி பானங்களை விற்பனை செய்யத் தடை விதிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாணத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் அல்பேட்டா!

ஏப்ரல் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசாங்கத்தின் புதிய சட்டம்

அக்டோபர் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 7, 2026
கியூபெக்

பார்ட்டி கியூபெக்கோவா கட்சியின் புதிய அறிவிப்பு

ஜனவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?