அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியின் போது சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் 31 வயதான கொல் தோமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “Cole Allen” என்ற பெயரை மட்டும் கொண்ட ஒரு மர்மமான ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த ட்வீட்டை தற்போது கண்டறிந்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இந்த பழைய பதிவைப் பகிர்ந்து இது உண்மையா அல்லது இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கலிபோர்னியாவின் டொரன்ஸ் பகுதியைச் சேர்ந்த கொல் ஆலன் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த பழைய ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
