சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு சிறப்பு விஜயம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்ல உள்ள நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது, சீன வெளியுறவு அமைச்சர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளன.
