தற்போது நாட்டில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது தவறுகளை மக்கள் மத்தியில் தவறாகச் சித்தரித்து, ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டின் ஆட்சியைச் சீரழித்த ஊழல்மிக்க அரசியல்வாதிகள், இவ்வாறான தொழில்நுட்பச் சிக்கல்களைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“பழைய ஊழல் அரசியல் கலாசாரம் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியான விடயங்களை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த எவரும் இடமளிக்கக் கூடாது. ஊழல்வாதிகள் மீண்டும் தலைதூக்க எடுக்கும் இத்தகைய முயற்சிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.”என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


