Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அபிவிருத்திகள் அந்த மண்ணின் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் – ஆளுநர் வலியுறுத்தல்

ஏப்ரல் 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடமாகாணத்தில் சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன எனவும், வடக்கில் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அவை தொடர்பிலான சாத்தியப்பாட்டு ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் ‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் அசோசியேட்டட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு விரிவான விளக்கங்களை வழங்கினர்.

புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியில், குறிப்பாகக் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது அறிவியல் ரீதியான ஆய்வுகளுடன் மக்கள் தெளிவூட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், தென்மராட்சி பிரதேசத்தின் மறவன்புலவு பகுதியில் காற்றாலைக் கோபுரங்கள் அமைக்க முற்பட்டபோது மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புகளை ஆளுநர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

அறிவியல் ரீதியான தெளிவான ஆய்வு முடிவுகள் இன்றி மக்கள் சில அச்சப்பாடுகளை வெளிப்படுத்தும் போது, பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவூட்டல்களை வழங்க வேண்டும். எவ்விதமான அபிவிருத்திகளும் அந்த மண்ணின் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

வட மாகாணத்தில் சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.

2030ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு இந்த ஆய்வு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை.

வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு) இதற்கான சாத்தியப்பாட்டு ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் உதவி இயக்குநர்கள் பொறியியலாளர் சதுர வன்னியாராச்சி, பாலித அபயரத்ன, ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் சர்வதேச, உள்நாட்டு ஆலோசனைக் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் குழாம்
அடுத்த செய்தி மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்

ஜனவரி 9, 2026
இலங்கை

பலவத்கம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஆலய வழிபாட்டிற்கு சென்றவர் , ஆலயத்தினுள் உயிரிழப்பு!

அக்டோபர் 20, 2025
இலங்கை

QR நடைமுறை வாகன உடமை மாற்றம் செய்தோர் அந்தரத்தில்!!

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?