Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் . ஊடக அமையத்தின் விருது வழங்கும் நிகழ்வு(Video)

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட வைத்திய நிபுணர் பேராசிரியர் சு.ரவிராஜ், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் விருத்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில், மறைந்த ஊடகவியலாளர்களுக்கான பொதுச்சுடரை ஈழநாதம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிவபாலன் ஏற்றி வைக்க, தலைமை உரையை யாழ்.ஊடக அமையத்தின் போசகர் ரட்ணம் தயாபரன் ஆற்றினார்.

“ஊடக அறிக்கையிடலின் சமகால போக்கு” எனும் தலைப்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும், “புதிய ஊடக கொள்கைகள்” எனும் தலைப்பில் போராசியர் எஸ்.ரகுராமும், “ஊடகத்துறை எதிர்நோக்கும் சட்டரீதியான சாவால்” சட்டத்தரணி வி.மணிவண்ணனும், “சட்ட வைத்திய துறைசார் ஊடக அறிக்கையிடல்” எனும் தலைப்பில் வைத்திய அதிகாரி சி.சிவரூபனும் உரையாற்றினர்.

சிறப்புரையை யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் பீடாதிபதியும், சிரேஷ்ட வைத்திய நிபுணருமான பேராசிரியர் சு.ரவிராஜ் நிகழ்த்தினார்.

மேலும் நிகழ்வில், ஊடகத்துறைக்கு பணியாற்றியவர்கள் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

நிமலராஜன் ஞாபகார்த்த விருதை ஊடகவியலாளர் ஐயன் கிருஷ்ணனும், மாமனிதர் தராகி சிவராம் ஞாபகார்த்த விருதை அமரர் சிவசுப்பிரமணியம் பாரதி சார்பில் அவரது சகோதரி பெற்றுக்கொண்டனர்.

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் ஞாபகார்த்த விருதை சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவசுப்பிரமணியம் சிவபாலனும், நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஞாபகார்த்த விருதை நவரட்ணம் கபில்நாத்தும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்.ஊடக அமையத்தின் சிறப்பு விருது மூன்று தசாப்தகால ஊடகத்துறையில் பணியாற்றிவருபவரும், யாழ்.ஊடக அமையத்தின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசாமி செல்வக்குமாருக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்தி யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை
அடுத்த செய்தி வடமாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முச்சக்கரவண்டி செலுத்த தடை (video)

நவம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை முதியவர்களின் இறுதி ஆசை நிறைவேறுமா?

டிசம்பர் 14, 2025
இலங்கை

தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி போராட்டம்!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு….

மார்ச் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?