Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு சலுகைகள் கோரும் அமெரிக்கா! – அடிபணிய மறுக்கிறார் பிரதமர் மார்க் கார்னி

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான குஸ்மா (CUSMA) வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அமெரிக்கா கனடாவிடம் பல கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதனை ஒரு ;நுழைவுக் கட்டணம் (Entry Fee) என்று அரசியல் வட்டாரங்கள் வர்ணிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே, கனடா சில முக்கிய சலுகைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது.

பால் பண்ணை ஒதுக்கீட்டு முறை (Dairy Quotas), டிஜிட்டல் இறையாண்மைக் கொள்கைகள் மற்றும் மதுபான விற்பனை விதிகள் ஆகியவற்றில், கனடா மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.எனினும், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு, இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமான போக்கைக் கடைபிடித்து வருகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று சில வர்த்தக வரிகளை கனடா நீக்கிய போதிலும், அமெரிக்கா அதற்குப் பதிலாக எந்தச் சலுகையையும் வழங்கவில்லை.
இதனால், முக்கியமான பேச்சுவார்த்தை தொடங்கும் வரை சலுகைகளைக் கொடுக்க மார்க் கார்னியின் அரசு விரும்பவில்லை எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்கா சொல்லும் விதிகளுக்கு எல்லாம் நாங்கள் கட்டுப்பட முடியாது என்று பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வர்த்தகத்திற்காக அமெரிக்காவை மட்டுமே சார்ந்திராமல் ஏனைய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவும் கனடா திட்டமிட்டுள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தின் மறுபரிசீலனை காலம் நெருங்கி வரும் வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த இழுபறி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அடுத்த செய்தி சிறுவர்களை வன்முறைக்கு இழுத்த 764 குழு – கியூபெக் இளைஞர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 31, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்

ஜூலை 7, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

பலப்படுத்தப்படும் கனேடிய எல்லைகளும் அதிகரிக்கப்படும் எல்லைக்காவலர்களின் அதிகாரங்களும்

பிப்ரவரி 15, 2025
கனடா

கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மைக்கேல் மா (Michael Ma)

டிசம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?