Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள்

ஏப்ரல் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (4) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இன்றைய தினம் சனிக்கிழமை (4) நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் (4) மருந்து கட்டுதல் மற்றும் ஊசி போடும் நடவடிக்கைகள் இடம்பெற்றதோடு, அவசர நோயளர்களை விடுதியில் அனுமதிக்கும் நடவடிக்கை மாத்திரமே இடம்பெற்றது.

வேறு எந்த வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை. இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

மேலும் தூர இடங்களில் இருந்துவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு தொடர்ச்சியாக வைத்தியர்களின் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது
அடுத்த செய்தி புது வாழ்வின் விழாவாக இந்த உயிர்ப்பு விழா அமைய வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சதொச போக்குவரத்தின் முன்னாள் முகாமையாளர் இந்திக கைது

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

டிசம்பர் 16, 2025
இலங்கை

புதுக்குடியிருப்பில் ஆரம்பமான உலக தெங்கு தின கொண்டாட்டம்

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?