Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வட மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் தீவிர மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார துறைசார்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கு உடனடியாக நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இம்மருத்துவமனை ஒரேயொரு மயக்கவியல் நிபுணருடன் (Consultant Anaesthetist) மட்டுமே இயங்கி வருவதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஒரேயொரு நிபுணத்துவ மருத்துவரே அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறுவை கூடங்கள், பல துறைகளின் வழக்கமான அறுவைக்கூடங்கள், எலும்பியல் அறுவை கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) சேவைகள், முதன்மை PCI (Primary PCI) உள்ளிட்ட இதய கதீட்டராக்கம் (Cardiac Catheterisation) மற்றும் பிற சிகிச்சை முறைகளுக்கான மயக்கவியல் ஆதரவு ஆகிய அனைத்தையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

இதன் விளைவாக வழக்கமான அறுவை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் (palliative procedures) மற்றும் அவசர காயங்களுக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறு மற்றும் பெண்நோயியல் (Gynaecological), எலும்பியல் (Orthopaedic) மற்றும் சிறுநீரக மண்டல சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.

அவசர நிலைகளில் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதேவேளை, மருத்துவமனையில் ஒரேயொரு அறுவை சிகிச்சை நிபுணரே (Consultant Surgeon) விபத்து சேவை, அவசர மற்றும் வழக்கமான அறுவை கூடங்கள், வார்ட் பராமரிப்பு மற்றும் அழைப்புப் பணி (On-call) ஆகிய பொறுப்புகளை கவனித்து வருவதால், அறுவை சிகிச்சை பராமரிப்புகளில் கடும் தாமதம் நிலவுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையை நம்பியிருக்கும் மக்களின் நலன் கருதி, நிலவும் மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறைக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.

முந்தைய செய்தி யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!
அடுத்த செய்தி கியூபெக்கில் குடும்பங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் குழந்தைப்  பராமரிப்புச் சேவை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்!

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

அக்டோபர் 2, 2025
இலங்கை

நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை!

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பகிடிவதையினால் உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர்

மே 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?