இவ்வாண்டுக்கான (2026) தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி புலமை பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் மார்ச் 30 ஆம் திகதியிலிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இவ்விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப திகதி முடிந்த பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
