Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மொன்றியல் மாநகரசபை ஊழியர்கள்

மார்ச் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகரசபையின் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்கள் (Blue-collar workers), ஊதிய உயர்வு கோரி வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை CUPE Local தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, புதன்கிழமை காலை 6:00 மணிக்குத் தொடங்கி, 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:00 மணி வரை நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் தற்காலிகப் பணிப் பகிஷ்கரிப்பால் மொன்றியல் பொதுமக்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், மீள்சுழற்சிப்பொருட்கள் மற்றும் உரம் சேகரிப்புப் பணிகள் முற்றாக நிறுத்தப்படவுள்ளது. மாநகரசபைக்குச் சொந்தமான விளையாட்டு அரங்குகள் (Arenas) மற்றும் சில பூங்காக்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.

அவசரமற்ற வீதித் திருத்தப் பணிகள் மற்றும் நீர் விநியோகப் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. மொன்றியல் மாநகரசபை நிர்வாகம் வழங்கும் 11 சதவீத ஊதிய உயர்வு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஈடுகொடுக்கப் போதுமானதல்ல என்று ஊழியர்கள் தரப்பு வாதிடுகிறது.

போராட்டம் நடைபெற்றாலும், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவசர கால நீர் விநியோகத் திருத்தங்கள் மற்றும் மிக முக்கியமான வீதிப் பழுதுபார்ப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என ஊழியர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ஓய்வை அறிவித்தார் ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
அடுத்த செய்தி மொன்றியலில் ஆற்றுக்குள் விழுந்த மாணவனைத் தேடும் பணியை நிறுத்தியுள்ள பொலிஸார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மாஃபியா குழுவோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரின் இல்லத்தின் மீது நடத்த திட்டமிட்ட தீவைப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மே 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ

ஏப்ரல் 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிமழை (Ice Storm) காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொன்றியல் நகரம்

மார்ச் 12, 2026
கியூபெக்

மொன்றியலில் காலவரையறையின்றி மூடப்படும் மெட்ரோ நிலைய நுழைவாயில்கள்

ஏப்ரல் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?